“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்”.

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும் என்பது இக்குறளின் பொதுப் பொருள்.
நற்குணங்கள் என்பது அன்பு,கருணை,பொறுமை,சகிப்புதன்மை இரக்கம் போன்றவைகள்.
தீயகுணங்கள் என்பது காழ்ப்புணர்ச்சி,சினம்,நன்றி மறத்தல், மோகம் முதலியவைகள்.
மேற்கூறிய குணங்கள் தனித்து நில்லா ! இவைகள் எந்த ஒரு
மனிதனால் விரும்பப்படுகின்றதோ அவனால் அக்குணங்கள் ஈர்க்கப்படும். அதன் காரணம் எக்குணம் அம்மனிதனை சென்றடைந்ததோ, அக்குணத்தின் தன்மையுடைய செயல்பாடு கொண்டவனாவான். இச்செயல்பாட்டின் வெளிப்பாடும் (எச்சமும்) அக்குணத்தின் பிரதிபலிப்பாகவே அமையும் .
தக்கார்:மேற்கூறிய நற்குணங்களை விரும்பி தனதாக்கிக் கொண்டவர்கள்
தகவிலர்: நற்குணங்களை விரும்பாததின் காரணம் இயல்பாகவே தீயகுணங்களால் ஈர்க்கப்படுபவர்கள்.
எச்சம் : தக்கார்,தகவிலர் இவர்களுடைய செயல்பாட்டின் பிரதிபலிப்பு.
எடுத்துக்காட்டாக: சகிப்பு தன்மை என்னும் குணத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட அன்னை தெரசா அம்மையின் எச்சத்தால் எவ்வாறு தொழுநோயாளிகள் பயன் அடைந்தார்களோ !
“அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்” என்று
இரக்ககுணத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட அருட்ப்ரகாச வள்ளலாரின் எச்சத்தால் ஏழைகளின் பசிப்பிணி இன்றளவும் போக்கப் பட்டுக்கொண்டுள்ளதோ ! அவ்வாறே.
மேலும் இப்பயன்பாட்டின் (எச்சத்தின் ) அளவை கொண்டு
நற்குணங்களான சகிப்பு தன்மையும்,இரக்ககுணமும் எந்த அளவுக்கு
இம் மேன்மக்களால் கடைபிடிக்கப் பட்டது என்பதையும் உலகம் அறிந்துகொள்ளும், என்னும் பொருள்பட வள்ளுவர் இக்குறளை வழங்கியுள்ளார்.
சாய்ராம்

