“உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு“.
விழிப்பது போலும் பிறப்பு“.

வள்ளுவர்சாக்காடு என்னும் இறப்பையும் பிறப்பையும் உறக்கம் மற்றும்விழிப்பு நிலைகளோடு ஏன் ஒப்பிடுகிறார் ?
இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மானிடர்க்கும் உறக்கம் மற்றும்விழிப்பு ஒரேயொருமுறை மட்டும் வருவதில்லை. மீண்டும் மீண்டும் உறக்கம் மீண்டும் மீண்டும் விழிப்பு என்று மாறி மாறி வந்து கொண்டேஇருக்கும்.
அதுபோல இறப்பும் பிறப்பும் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் (மானிடவர்க்கம் உள்பட) மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.
மேலும் உறக்கம் மற்றும் விழிப்பு நிலைகளில் ஒன்றுக்கொன்று தொடர்பு என்பதும் இல்லை. அதாவது உறங்கச் செல்லுமுன் தம் உணர்வில் இருக்கும்
இருப்பிடமும் (space) ,காலமும் (time) ஆழ்ந்த உறக்கத்தில் உணரப்படுவதில்லை….
உறக்கம் கலைந்த விழிப்பு நிலையில் தம் இருப்பிடமும் (space) ,காலமும் (time) மீண்டும் புதியதாகவே உணரப்படுகிறது. இது ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வாகும.
அது போல ஒருவர் இறக்கும் வரை…..
நினைவில் இருக்கும் சூழலும்,காலமும் இறந்த நிலையில் அறியப்படுவதில்லை. மீண்டும் பிறந்த நிலையில் இருப்பிடமும் (space) ,காலமும் (time) புதியதாகவே உணரப்படுகிறது.
இத்தகைய நிலையினை வெளிப்படுத்தவே உவமானப்பொருளாக உறக்கம் மற்றும் விழப்பு நிலையினை வள்ளுவர் கையாண்டுள்ளார்.
இப்பிறவி பெருங்கடலில் இருந்து விடுபட
பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர்
அத்தியாயம் -6 ,தியானயோகம்– ஸ்லோகம்-17
“அளவுடன் கர்மங்கள் செய்து உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமை (தொடர்பு,link) வகிப்பவனுடைய யோகம் துன்பத்தை (பிறவி சூழலை) துடைப்பதாகிறது“
என்னும் வழிமுறையை உபதேசிக்கிறார்….
இப்பொருள் படுத்தியே வள்ளுவரும் “தூங்கற்க தூங்காது செய்யும் வினை”. என மற்றொரு குறளாக நமக்கு அளித்துள்ளார்
Ramana Maharishi says: “Persist in the enquiry throughout your waking hours. That would be quite enough. If you keep on making the enquiry till you fall asleep, the enquiry will go on during sleep also. Take up the enquiry again as soon as you wake up.”
அதாவது “space and time” என்பது உணரப்படும் ஒன்று அன்று! நீயே அதுவாகவே இருக்கிறாய் என்பதே பொருள். இத்தகையயோகம் சத்குருவின் அருளால்சித்திக்கின் துரியநிலை என்னும் அரியநிலையை அடைந்து சாக்காடு செல்லாத வீடுபேறு அடையலாம் என்னும் மறை பொருள்பட வள்ளுவர் இக்குறளை அருளியுள்ளார்.
சாய்ராம்.

