காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா என்பது இக்குறளின் பொதுப்பொருள்.
இக்குறளில் வள்ளுவர் குறிப்பிடும் இவ்வினையை, திருவினையாக–
வினை என்னும் பதத்திற்கு வெறும் செயல் என்று பொருள் கொள்ளலாகாது. எந்த ஒரு சம்பவம் நடந்தே தீருமோ,தவிர்க்கவே இயலாதோ அதுவே வினை எனப்படும். இவ்வினையை குறித்தே வள்ளுவர் தம் மற்றொரு குறளில்
“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்”
என்கிறார். திரு என்னும் சொல்லிற்கு தெய்வத்தன்மை பொருந்தியது என்று பொருள். தவிர்க்கவே இயலாத இவ்வினையை, திருவினையாக, தெய்வத்தன்மை உடைய வினையாக மாற்றுவதற்கு முயற்சி என்பது இன்றியமையாததாகிறது. மேலும் இத்தகைய முயற்சியை இடைவிடாது முயற்சிக்க வேண்டும். எனவேதான் வள்ளுவர் இத்தகைய வினையை (செயல்பாட்டினை) “தூங்கற்க தூங்காது செய்யும் வினை” என்பதாக வர்ணிக்கிறார். மேலும்…
“உறக்கத்திலும்,விழிப்பிலும் முறைமை வகிப்பவனுடைய யோகம்
துன்பத்தை(வினையை திருவினையாக்கி) துடைப்பதாகிறது “
என்று கீதை இம்முயற்சியை யோகம் என்றே குறிபிடுகிறது. இத்தகைய முயற்சியை மேற்கொள்பவர்கள் மற்ற செயல்பாடுகள் எதுவாயினும்…“தூங்குக தூங்கிச் செயற்பால” என்னும் வள்ளுவரின் வாக்கிற்கேற்ப நிதானத்துடனே செயல்படுவார்கள்.
சாய்ராம்


