You Are That!- “A doer of action in a passive state”

                                                                      

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
(அதிகாரம்:தவம் குறள் எண்:265)

விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும் என்பது இக்குறளின் பொதுப் பொருள்.

இக் குறளில் வள்ளுவர் கூறும்செய்தவம்என்பது ஒரு இடைவிடாத செயலை குறிக்கும் பதம்
 
“கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் காண்போம் மக்களில் மேதாவி; அவனே யோகி; அவனே எல்லாம் செய்து முடித்தவன்”.
ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் 4: ஸ்லோகம்: 18

ஆத்மா அல்லது உயிர் என்பது செயலற்றது. அகர்மம் என்பது செயல்பாடு இல்லாத நிலையை குறிப்பது. அகர்மத்தில் கர்மம் என்பது செயலற்ற தன்மையாக  இருந்து  கொண்டிருக்கும் இவ் ஆத்மாமாவினில் செய்யப்படும் கர்மத்தையே  குறிக்கின்றது.

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில் உபதேசித்த இம் முறையில் இத்தகைய தவமானது, சான்றோர் எனப்படுவர்களால் “மட்டுமே” எக்காலத்தும் இடைவிடாது…செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கும் ஒருசெயல்பாடு.  இத் தவத்திற்கு கட்டுப்பட்டே … 

“அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு

(அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:247) 
என்னும் வள்ளுவரின் மற்றொரு குறளுக்கேற்ப இவ்வுலகமும், அவ்வுலகமும் இயங்கி கொண்டு இருக்கிறது.
இத் தவத்தை மேற்கொள்பவர்களுக்கு, வேண்டி பெறுதல் என்பதே இல்லை. ஏனெனில் இத்தகைய அரும்பெரும் தவத்திற்கு முன் ‘வேண்டுபவன யாவும்
வேண்டிகொண்டு நிற்பதால்‘ !!  இஃதினைஉணரப்பெற்ற சான்றோர்களால்  இத் தவமானது…
 

ஈண்டு என்பதற்கு : 1.விரைவு,2. speed, 3.quickness.4. இம்மையில், இப்பிறவி யில் in this birth; 5. இவ்விடத்தில் here, in this place; 6. இவ்வுலகில் in this world; 7. இப்பொழுது now என்று பொருள்கள் உள்ளன.

அதன்படி உலக நலன் பொருட்டு,  இத்தகையை சான்றோர்களால் இடைவிடாது, கால வெளி கடந்தும் கூட, இத் தவமானது… முயலப்பட்டு  கொண்டே இருக்கும் என்பது இக்குறளின் மெய்ப்பொருள் ஆகும்.

சாய்ராம்.

Leave a comment