வாலி–காமம்,குரோதம்,துவேசம்,லோபம்,மோகம்,மதம்,மாத்சரியம் என்னும் ஏழு குணங்களின் வடிவான அஹங்காரதின் மொத்த பிரதிபலிப்பு.
வாலியை யாரும் வெல்லமுடியாது, ஏனெனில் வாலியின் முன் யார் வந்து நின்றாலும் அவர்களின் பலத்தின் பாதி இயல்பாகவே வாலியை வந்தடையும். குணங்களுக்கு குணங்களே எதிரிகள். குணங்களால் குணங்களை வெல்லமுடியாது. (குரோதத்தை குரோதத்தால் வெல்லாமுடியாது). மாறாக அக்குணங்கள் மிகையாகுமேயன்றி, அழிவு என்பது ஒருக்காலும் ஏற்படாது.
அப்படிப்பட்ட வாலியை வெல்லக்கூடிய சக்தி ஏழு குணங்களுக்கும் அப்பாற்பட்டவரான,
”கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.”
பொதுப்பொருள்:
எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள், ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி போன்ற உறுப்புகள் இருந்தும், அவைகளுக்கு உண்டான, குறிப்பிட்ட புலன்களான உணர்வு இயக்கம், பேசும் திறன், பார்வை, சுவாசம், கேட்கும் திறன் அவ்ற்றை இழந்து, எந்தவிதமான பயனும் அற்றதற்கு இணையாகும்.
என்று வள்ளுவர் பெருந்தகை அளித்த குறளுக்கு ஒப்ப எண்குணத்தான் என்னும் தகுதியில் மிளிர்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீ இராமபிரான் ஒருவருக்கு மட்டுமே உண்டு.
வாலி ஏழு குணங்களை கொண்ட அஹங்காரத்தின் வடிவம். இவ்வடிவத்தால் எண்குண வடிவான ஸ்ரீ இராமபிரானை காணவே இயலாது. ஏழு விதமாய் வளைந்து, நெளிந்த நின்ற ஏழு மரங்களை, தன் ஒரே பாணத்தால் துளைத்த ஸ்ரீ இராமனின் ராமபானமானது வாலியின் மார்பை பிளந்தபின், அவனில் அதுவரை குடிகொண்டிருந்த இருந்த ஏழு குணங்களோடு கூடிய அஹங்காரம் அழிந்ததின் காரணம், அதுவரை வெளிப்படாமல் இருந்த எண்குணத்தான் சொரூபமான ஸ்ரீ இராமபிரானின் தரிசனம் கிட்டியது.
According to Bhagavan Ramana Maharshi, the sea is unaware of its own waves. Similarly, the pure self is unaware of its ego, and vice versa, the egoistic body does not realize the pure self, though it exists within it.
ஸ்ரீ இராமபிரான் PURE SELF என்னும் எண்குணத்தான் வடிவம். ஏழு குணங்களான வாலியின்(FALSE SELF ) வெளிப்படும் பொழுது எண்குணத்தான் வடிவான இராமனின்(PURE SELF) தோற்றத்தை காணவே இயலாது.எண்குணத்தான் வடிவம் வெளிப்படும் தருணம் ஏழு குணங்களும் அழிந்து போயிருக்கும். இதை விளக்கவே வாலிவதப் படலம் ராமகாவியத்தில் உருவானதாக கொள்ளலாம்.
சாய்ராம்


