என்பும் உரியர் பிறர்க்கு“.
குறள் 72: அன்புடைமை
இதில் வள்ளுவர் குறிப்பிடும் அன்பு எனப்படுவது
“சர்வே ஜன: சுகினோ பவந்து“ என்னும் பொருள் கொண்ட தெய்வாம்சம் பொருந்திய குணம். அது ஒரு பொதுவுடமை சொல்.
இப் பொதுவுடமையை தன் உடைமையாக ஆக்கிக்கொண்டோரே அன்புடையவர்கள் ஆவார்கள்.இவர்களிடமிருந்து வெளிப்படும் அன்பானது குறிப்பாக எப்பொருட்டும் இன்றி (அதாவது மனைவி, தம்மக்கள்,உற்றார், உறவினர்,அயலார்,நண்பர் என்னும் இவர்கள் பொருட்டோ,அல்லது வேறு தன்னலம் பொருட்டோ இன்றி) இப்பூவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து உயிர்களும் உய்வடையும் பொருட்டே இத்தகையோரிடம் இருந்து இயல்பிலேயே,
அவ் அன்பானது இடைவிடாது சதா சர்வகாலமும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.அவ் அன்பின் மழையில் எல்லா உயிர்களும் அவரவர்களுக்குரிய பயனையும் அடையப்பெற்று நலமுடன் வாழ்வார்கள்.
அ ஃதின்றி ஒன்றை மட்டும் முன்னிலைப்படுத்தி ஒருவரால் செலுத்தப்படும் அன்பிதனுள் முன்னிலையை தன்னிலையாக, அதாவது எல்லாம் தமக்குரியதாக மட்டுமே ஆக்கிக்கொள்ளும் எண்ணமே அ ஃதில் மேலோங்கி இருப்பதால் அவர்கள் அன்பிலாதவர்களாகவே கருதப்படுவார்கள் என்னும் பொருள்படவே வள்ளுவர் பெருந்தகை இக்குறளை நமக்கு வழங்கியுள்ளார்.
சாய்ராம்


