
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்”.
குறள் 260: புலான்மறுத்தல்
இக்குறளுக்கு கூறும் பொது விளக்கம்:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் என்பதாகும்.
அப்படியாயின் ஷரிடிசாய்பாபா போன்ற மகான்கள் அவர்கள் தாம்
வாழ்ந்த காலங்களில் புலால் உண்பவராகத்தான் இருந்திருக்கிறார்.
ஆனால் இன்று உலகமே அவரை கைகூப்பி தொழுகின்றதே !!!
உண்மையில் வள்ளுவர் கூறும் புலான் மறுத்தல் என்பது ?
கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், ஞானவிக்ஞான யோகம்,
சுலோகம்-11ல்
“உயிர்களிடத்து தர்மத்துக்கு முரண்படாத காமமாக இருக்கிறேன்.
என்று பார்த்தனுக்கு உபதேசிக்கிறார்”
கிருஷ்ணர் சொல்லும் தர்மத்துக்கு முரண்படாத காமம் என்பது உத்தமமான இல்வாழ்க்கை வாழும் தம்பதிகள்,நன்மக்களை பெற்றெடுப்பதிர்க்காக மட்டுமே சங்கமித்துக்கொள்ளும் தாம்பத்தியமேயாகும். இது தெய்வ சம்பத்து கொண்டது.
அவ்வாறு நன்மக்களை பெற்றுக்கொண்ட பின் தாம்பத்தியத்திலிருந்து தங்களை தாங்களே விடுவித்துக்கொண்டு, அதன்பின் அன்னையும் பிதாவுமாக பெற்றெடுத்த தம்மக்களுக்கு முன்னறி தெய்வங்களாகவும் விளங்குவார்கள். மற்றும் ஒருவர் மற்றொருவருக்கு உறுதுணையாக
“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி
தான்நட்பாங் கிழமை தரும்”.
என்னும் குறளிற்கேற்ப நட்புக்கு இலக்கணமாகவே வாழ்வர்
இதுவே வள்ளுவர் குறிப்பிடும் புலான் மறுத்தல், என்பதாக இருக்க வேண்டும். அதாவது நன்மக்களை பெறும் நோக்கமோ அல்லது மெய்யான அன்பின் அடையாளமோ இன்றி வெறும் உருவ அமைப்பினால் மாத்திரம் ஒருவரால் ஒருவர் மீண்டும் மீண்டும் ஈர்க்கப்பட்டு ஒருவர் புலன்களை ஒருவர் புணரும் செயலினை மறுத்தல் என்பதாக கொள்ளலாம். அவ்வாறு ஒருவர் இத்தகைய புணர்ச்சி பழகுதலில் இருந்து தம்மை தாமே விடுவித்துக்கொண்டால் கொல்லாமையும் இயல்பாகவே சேர்ந்துவிடும். எவ்வாறெனின்
“விந்து விட்டவன் நொந்து கெட்டான்” என்னும் பழமொழிக்கேற்ப வெளிப்படும் ஒவ்வொரு விந்தினின்றும் கோடானுக்கோடி உயிர்அணுக்களும் அவனின் தேகத்திலிருந்து வெளிப்பட்டுசெத்து மடிவதால், ஒருவர் இதனின்று விடுபடும் பொழுது, கொல்லாமையும் இயல்பாகவே அதில் சேர்ந்து விடுகின்றது. இத்தகைய வாழ்க்கை வாழ்கின்றவனைத்தான் உலகத்தில்உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் என்னும்பொருள் படவே வள்ளுவர் இக்குறளை நமக்கு வழங்கியுள்ளார்.
சாய்ராம்

