“புத்திமான் பலவான் ஆவான்”

புத்திமான் பலவான் ஆவான்

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு“.  குறள் 631

ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர் என்பது இக்குறளின்
பொதுப்பொருள்.

இக்குறளில் வள்ளுவர் குறிப்பிடும் அமைச்சு என்னும் பதத்திற்கு ஒரு நாட்டின் அரசரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் என்று பொருள் கொள்ளுவதைவிட இம்மானுட தேகத்தில் வழிகாட்டியாக இருந்து
கொண்டிருக்கும் அவரவர் புத்தியையே அமைச்சு என்று பொருள் கொள்வது சாலச்சிறந்தது ஆகும். சஞ்சலம் நிறைந்த மனதினில் அமைச்சு என்னும் ஸ்தானத்தில் இருந்து கொண்டு வழிகாட்டுவது
அவரவர்களின் புத்தியேயாகும்.புத்தியானது பிரகாசிக்கும் தருணத்தையே காலம் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அந்த காலத்தின் (புத்தியின்) கட்டளைப்படி, தகுந்த கருவி கொண்டு ஆற்றப்படும் செய்கையில்… அருவினையும் மாண்டது அவனது வினைப்பயன்கள் அனைத்தும் நசிவுற்று, அச்செயலானது பொதுப்பயன்களாக, அதாவது செய்பவனுக்கும்,
ஏனைய மற்றோர்களுக்கும் நன்மை அளிக்கக்கூடியதாக உருமாறும்.

“புத்திமான் பலவான் ஆவான்” என்னும் பழமொழிக்கேற்ப புத்தி என்னும் இவ் அமைச்சரின் அறிவுரைப்படி செயல்படும் அனைத்து செயல்பாடுகளும் எக்காலத்தும் எவர்க்கும் நன்மை
அளிக்கக்கூடியதாகவே இருக்கும்.

சாய்ராம்

Leave a comment